Download Venkata Kavi app
| Madhyamāvati | Ādi | 
| P | pēshādē pōngaḷaḍi - en | 
| MK | piḷḷai vandu ungaḷ veeṭṭil kaḷḷamiṭṭān enṛu sholli pēshuginṛeer kaiyai kaiyai veeshuginṛeer vēlaiyillai | 
| AP | kāshāmbu mēniyuḷḷa kaṭṭazhahan en piḷḷai kālaiyilirundu ennai kaṇamum ahalavillai | 
| MK | vāchāma gōcharamāi vandu shonneer inda shollai ungaḷ vambukkum tumbukkum endan mahandānō vēlaiyillai | 
| C | 
 | 
| 1 | ivaḷānāl miha nāṇam koṇḍavaḷ nēṭṛu inda maharājan veeṭṭai shonda veeḍu enṛu eṇṇi ingumangum alaindu tirindavaḷ uvamaiyōḍu uḷarikkoṭṭi muttamiṭṭānenṛu sholli ooraṛiya muzhakkiviṭṭu nāṇamāhudenṛavaḷ | 
| 2 | kaiyyumeiyyumāi piḍittu vandēnenṛu sholli kaṇakkāha pēshinālē ivaḷoru kaḷḷi meiyyāhakkāṭṭaḍi enṛāl vizhiyum paraparattu tan miraḷum piḷḷaiyai kāṭṭi vizhikkirāḷē palli | 
| 3 | oorkkuzhandai azhudālō kaṇṇan kiḷḷi viṭṭān uṛi onṛu vizhundālō kaṇṇan taḷḷi viṭṭān kār veṇṇai kāṇōm enrāl kaṇṇan koḷḷaiyiṭṭān ungaḷ kaṛpanai sheiyyum poiyyukku kaṇṇanō ahapaṭṭān | 
| மத்யமாவதி | ஆதி | 
| ப | பேசாதே போங்களடி - என் | 
| மக | பிள்ளை வந்து உங்கள் வீட்டில் கள்ளமிட்டான் என்று சொல்லி பேசுகின்றீர் கையை கையை வீசுகின்றீர் வேலையில்லை | 
| அப | காசாம்பு மேனியுள்ள கட்டழகன் என்பிள்ளை காலையிலிருந்து என்னைக் கணமும் அகலவில்லை வாசாம கோசரமாய் வந்து சொன்னீர் இந்தச் சொல்லை உங்கள் வம்புக்கும் தும்புக்கும் என்தன் மகன்தானோ வேலையில்லை | 
| ச | 
 | 
| 1 | இவளானால் மிக நாணம் கொண்டவள் நேற்று இந்த மகராஜன் வீட்டை சொந்த வீடு என்று எண்ணி இங்குமங்கும் அலைந்து திரிந்தவள் உவமையோடு உளறிக் கொட்டி முத்தமிட்டானென்று சொல்லி ஊரறிய முழக்கிவிட்டு நாணமாகுதென்றவள் | 
| 2 | கையுமெய்யுமாய்ப் பிடித்து வந்தேனென்று சொல்லி கணக்காகப் பேசினாளே இவளொரு கள்ளி மெய்யாகக்காட்டடி என்றால் விழியும் பரபரத்து தன் மிரளும் பிள்ளையைக் காட்டி விழிக்கிறாளே - பல்லி | 
| 3 | ஊர்க்குழந்தை அழுதாலோ கண்ணன் கிள்ளிவிட்டான் உறி ஒன்று விழுந்தாலோ கண்ணன் தள்ளிவிட்டான் கார்வெண்ணைக் காணோமென்றால் கண்ணன் கொள்ளையிட்டான் உங்கள் கற்பனை செய்யும் பொய்யுக்கு கண்ணனோ அகப்பட்டான் | 