onṛu sholvēn

Paḍippāḍalpattu
 
 
1
onṛu sholvēn en uḷ kalandāḍum
kunṛam shumandōi kuraiteera vandōi
nanṛidu nanṛenṛu nāngaḷ mahizhndiḍa
nāraṇanē paḍi ēri aruḷhavē
 

2
mellakkaram oonḍṛi mēni nimirndezhundu
vallan un aṇṇan karam paṭṛiyaruḷiya vāru
ellā ulaham ingu edirninṛu paṇindiḍa
engaḷ uyirē paḍiyēri aruḷhavē
 

3
muttōḍum pavaḷamum pacchai marakatamum
vaittizhaitta ponnin vārppuppaḍimishai
kuttudum endranjikkoṭṭina malarmēlē
gōvindanē paḍi ēri aruḷhavē
 

4
kacchuḍai nalliḷam kārigaiyar tamadu
icchaikkaḍi karaṇattu ēngu mannavaranna
pacchait tamanakamum palvaṇṇappoomēlē
padam toṭṭu aruḷippaḍi ēri aruḷhavē
 

5
ēḍi iḷam nangāi innē nee pōndu
pāḍipparavum ivan paḍiyēṭṛam kāṇa
ōḍi ivan tādai uḍan varappōdāi
uttamanē paḍiyēri aruḷhavē
 

6
mundum vinaipuḍaiya mootōn unakenṛu
pindi aruḷum tiram piḷḷāi nee kāṇudiyō
tandai varumaḷavum shaṭṛe irundezhundu
taḷirpadam koṇḍu padiyēri aruḷhavē
 

7
ēzhēzhulaham vāzha ērikkoluvirukkum
māzhai maṇivaṇṇa manṛi lēmakkāha vandu
tāzhpuvi yattanaiyum tavamāhattavazhndaruḷi
ēzhil paḍi vandāi ēri aruḷhavē
 

8
tandaiyum innapira shānḍṛōrum ivaikāṇa
vandu ninṛār engaḷ vanavarērē
mandaiyil kanṛum māvenṛum āniraiyum
vandu paravumpaḍi ēri aruḷhavē
 

9
mā vaikundā un madimukham viyarādē
pāvai karam āḍapaṭṭuttugil oṭṛi
tooveṇ kavariyāḍa tōhaicchiviriyāḍa
sēvai taruvōi paḍiyēri aruḷhavē
 

10
vandu nilai ponnin vāyil maṇikkatavam
shindāda mangala neer shindum varai irundu
endenda ulahelām tandantam maṇamkamazha
endan iḍai vandu ēri aruḷhavē
 
11
eeraindu vizhiyivai ēzhishai maḍukkavē
eeraindu seviyivai ezhilinaipparuhavō
ōrainda talaininṛān oruvan paḍiyēra
ulahelām vaikundam āvadu meiyē

 
 

 


 


படிப்பாடல்பத்து
 
 
1
ஒன்று சொல்வேன் என் உள் கலந்தாடும்
குன்றம் சுமந்தோய் குறைதீர வந்தோய்
நன்றிது நன்றென்று நாங்கள் மகிழ்ந்திட
நாரணனே படிஏறி அருள்கவே
 
 
 
2
மெல்லக் கரம் ஊன்றி மேனி நிமிர்ந் தெழுந்து
வல்லன் உன் அண்ணன் கரம் பற்றியருளிய வாறு
எல்லா உலகும் இங்கு எதிர்நின்று பணிந்திட
எங்கள் உயிரே படியேறி அருள்கவே
 
3
முத்தோடும் பவளமும் பச்சை மரகதமும்
வைத்திழைத்த பொன்னின் வார்ப்புப் படிமிசை
குத்துதும் என்றஞ்சிக் கொட்டின மலர்மேலே
கோவிந்தனே படிஏறி அருள்கவே
 
4
கச்சுடை நல்லிளம் காரிகையர் தமது
இச்சைக்கடி கரணத்து ஏங்கு மன்னவரன்ன
பச்சைத் தமனகமும் பல்வண்ணப் பூமேலே
பதம் தொட்டு அருளிப் படிஏறி அருள்கவே
 
5
ஏடி இளம் நங்காய் இன்னே நீ போந்து
பாடிப்பரவும் இவன் படியேற்றம் காண
ஓடி இவன் தாதை உடன் வரப் போதாய்
உத்தமனே படியேறி அருள்கவே
 
6
முந்தும் வினையுடைய மூத்தோன் உனக்கென்று
பிந்தி அருளும் திறம் பிள்ளாய் நீ காணுதியோ
தந்தை வருமளவும் ற்றே இருந்தெழுந்து
தளிர்பதம் கொண்டு படிஏறி அருள்கவே
 
7
ஏழேழுலகம் வாழ ஏறிக் கொலுவிருக்கும்
மாழை மணிவண்ண மன்றி லெமக்காக வந்து
தாழ்புவி யத்தனையும் தவமாக்கத் தவழ்ந்தருளி
ஏழின் படி வந்தாய் ஏறி அருள்கவே
 
8
தந்தையும் இன்னபிற சான்றோரும் இவைகாண
வந்து நின்றார் எங்கள் வானவரேறே
மந்தையில் கன்றும் மாவென்றும் ஆநிரையும்
வந்து பரவும்படி ஏறி அருள்கவே
 
9
மா வைகுந்தா உன் மதிமுகம் வியராதே
பாவை கரம் ஆடப்பட்டுத் துகில் ஒற்றி
தூவெண் கவரியாட தோகைச்சிவிறியாட
சேவை தருவோய் படிஏறி அருள்கவே
 
10
வந்தது நிலை பொன்னின் வாயில் மணிக்கதவம்
சிந்தாத மங்கல நீர் சிந்தும் வரை இருந்து
எந்தெந்த உலகெலாம் தந்தந்தம் மணம்கமழ
எந்தன் இடை வந்து ஏறி அருள்கவே
 
11
ஈரைந்து விழியிவை ஏழிசை மடுக்கவே
ஈரைந்து செவியிவை எழிலினைப் பருகவோ
ஓரைந்த தலைநின்றான் ஒருவன் படுயேற
உலகெலாம் வைகுந்தம் ஆவது மெய்யே