shree rāma jayamē

Rāgamālika
Sankṣhēpa Rāmāyaṇa
Ādi
P - Nāṭṭai
shree rāma jayamē jayam
 
MK
shelvattilē mudalāhiya vēdam
sheivadilē talaiyāhiya bōdham
uyvadilē mudalāhiya nādam
ulahattilē mudalāhiya geetam
 
C1 - Nāṭṭai
pārāḷum dasharathan bhāggiyamāi
pāyasam vaittadoru pāttiramāi
sheerāḷum kōwsalaikkē vāittadumāi
dinakaran kulattirukkoru nēttiramāi
 
MK
teerāda paramānandam taru
tiruttava kowshikarum kēṭṭadu
tēḍi vanda tāṭakai enum arakki
dēvalōka uravum kaṇai pōṭṭadu
yārālum iyalāda shiva danusai
alakshiyamāha vaḷai pōṭṭadu
azhahāhina janakan mahaḷai tiru-
maṇam koṇḍu ayōddhi nahar meeṭṭadu
 
C2 - Varāḷi
parashurāman tiruttavattinai vāngi
paṭṭābhishēkamurum sheidiyāl ēngi
varam iraṇḍāl kaikēshi kai ōngi
vākku tanda paḍi paṭṭaṇam neengi
 
MK
paḍahilēri guhanuḍan aḷavaḷāvi
mandākini karai kaḍandu shenradu
bhaktiyoḍu vanda sattiya neriyenum
bharatanukku pādukaiyum tandadu
aṭavitalamāna panchavaṭi shenru
alayum māreecha māninai konṛadu
āruyir dēviyai tēḍum vazhi tannil 
anumantanai kaṇḍē vayankoṇḍadu
 
C3 - Ārabhi
vānara mannanuḍan nēshattai koṇḍu
vāli tanakkum mōkṣhattaiyē tandu
jānakiyai lankāpuri shenru
tāvi vanda hanumanai puhazhndu
 
MK
taḍangal ariyāda kaḍalinai kaḍan-
dāhiḍavum aṇai kaṭṭiyum ninradu
tanjam ena vanda vibheeṣhaṇanukku
tānāha lanka puriyai tandadu
diḍam koṇḍu rāvaṇanaiyum mayakki
shenrirundu nāḷai vā enradu
jayam koṇḍu pushpaka rathamēriyum
tirumbi nannahar ayōddhi vandadu
 
C4 - Gowḷa
nanmaṇi vaṭṭa kuḍai bharatanum tānga
lakṣhmaṇan shatrughnanum chāmaram ēnda
ponperum padattinai hanumanum tānga
puṇṇiya kaḍalinil yāvarum neenda
 
MK
bhuviyum vānulahum onru kooḍi vara
pōṭri ishai pāḍa vāzhttiyum ninradu
pongum mangala milanga dundubhi
muzhanga marai mozhi shazhangavum ninradu 
tava nirai sindhu gangai kāviri gōdhavari
narmadai poompunal eendadu
daṇḍa kamaṇḍalam vaitta vasiṣhṭharin
tan kara paṭṭabhishēkamum koṇḍadu
 
C5 - Maṇirangu
kāshikku veeshamena karuṇaiyai sheiyyum
gangaikkum adihamāi mangaḷam sheiyyum
vāshiyām moolattiḍai manandarinduyyum
māmāyai idai kēṭṭāl tānāha poiyyum
 
MK
vāridhiyai aṇai kaṭṭi naḍandadu
vānattilē malai shumandu shenradu
vanattilē kiḍanda perum pāraiyai
māshu neekki peru vāzhvaiyum tandadu
kāriyam edilum tuṇaiyāha ninradu
kālanaiyum vazhakkāḍiyum venradu
gati illāda kaṇam nidhi vandadu
kaviyilum venkaṭa kaviyum uṇarndadu
 

 

ராகமாலிகா
ஸங்ஷேப ராமாயணம்
ஆதி
ப - நாட்டை
ஶ்ரீ ராம ஜயமே ஜயம்
 
மக
செல்வத்திலெ முதலாகிய வேதம்
செய்வதிலே தலையாகிய போதம்
உய்வதிலே முதலாகிய நாதம்
உலகத்திலே முதலாகிய கீதம்
 
ச1 - நாட்டை
பாராளும் தரதன் பாக்கியமாய்
பாயஸம் வைத்ததொரு பாத்திரமாய்
சீராளும் கோஸலைக்கே வாய்ததுமாய்
தினகரன் குலத்திர்கொரு நேத்திரமாய்
 
மக
தீராத பரமானந்தம் தரு
திருத்தவ கௌசிகரும் கேட்டது
தேடி வந்த தாடகை எனும் அரக்கி
தேவலோகம் உறவும் கணை போட்டது
யாராலும் இயலாத சிவதனுசை
அலட்சியமாக வளைத்து போட்டது
அழகாகின ஜனகன் மகளை திரு -
மணம் கொண்டி அயோத்தி நகர் மீட்டது
 
ச2 - வராளி
பரசுராமன் திருத்தவத்தினை வாங்கி
பட்டாபிஷேகமுரும் செய்தியால் ஏங்கி
வரமிரண்டால் கைகேசி கை ஓங்கி
வாக்கு தந்த படி பட்டணம் நீங்கி
 
மக
படகிலேரி குஹனுடன் அளவளாவி
மந்தாகினி கரை கடந்து சென்றது
பக்தியோடு வந்த ஸத்திய நெறியெனும்
பரதனுக்கு பாதுகையும் தந்தது
அடவிதளமான பஞ்சவடி சென்று
அலையும் மாரீச மானினைக்கொன்றது
ஆருயிர் தேவியை தேடும் வழி தன்னில்
அனுமந்தனை கண்டே வயங்கொண்டது
 
ச3 - ஆரபி
வானர மன்னனுடன் நேத்தைக்கொண்டு
வாலி தனக்கும் மோக்ஷத்தையே தந்து
ஜானகியை லங்காபுரி கண்டு
தாவி வந்த அனுமானை புகழ்ந்து
 
மக
தடங்கள் அறியாத கடலினை கடந் -
தாகிடவும் அணை கட்டியும் நின்றது
தஞ்சமென வந்த விபீஶணனுக்கு
தானாக லங்காபுரியை தந்தது
திடம் கொண்டு ராவணனையும் மயக்கி
சென்றிருந்து நாளை வா என்றது
ஜயம் கொண்டு புஶ்பக ரதமேறியும்
திரும்பி நன்னகர் அயோத்தி வந்தது
 
ச4 - கௌள
நன்மணி வட்டக்குடை பரதனும் தாங்க
லக்ஷ்மணன் த்ருக்னனும் சாமரம் ஏந்த
பொன்பெரும் பதத்தினை ஹனுமனும் தாங்க
புண்ணிய கடலினில் யாவரும் நீந்த
 
மக
புவியும் வானுலகும் ஒன்று கூடி வர
போற்றி இசைப்பாட வாழ்த்தியும் நின்றது
பொங்கும் மங்கலமிலங்க துந்துபி
மு- ழங்க மறைமொழி சழங்கவும் நின்றது
தவ நிறை சிந்து கங்கை காவிரி கோ - தாவரி
நர்மதை பூம்புனல் ஈந்தது
தண்ட கமண்டலம் வைத்த வஸிஷ்டரின்
தன் கர பட்டாபிஶேகமும் கொண்டது
 
ச5 - மணிரங்கு
காசிக்கு வீமென கருணையை செய்யும்
கங்கைக்கும் அதிகமாய் மங்கலம் செய்யும்
வாசியாம் மூலத்திடை மனதறிந்தய்யும்
மாமாயை இதைக்கேட்டால் தானாக பொய்யும்
 
மக
வாரிதியை அணை கட்டி நடந்தது
வானத்திலே மலை சுமந்து சென்றது
வனத்திலே கிடந்த பெரும் பாரையை
மாசு நீக்கி பெரும் வாழ்வையும் தந்தது
காரியம் எதிலும் துணையாக நின்றது
காலனையும் வழக்காடியும் வென்றது
கதியிலாத கணம் நிதியென வந்தது
கவியிலும் வெங்கடகவியும் உணர்ந்தது