ivandān ivandānē

Vasanta
 
Ādi
P
ivandān ivandānē viḍādē viṭṭāl
ettanai kālamāmō teriyādē
 
AP
ivandān ivanēdān ayyamillayē
ettanaidān koḷḷaikkoṇḍān kaṇakkillayē
bhuvanam muzhudum ivanukku eeḍillayē - ivanai
pōhaviṭṭu tēḍuvadu attanai eḷidallavē
 
C1
āyarpāḍi teruvinil yāraikkēṭṭālum
āḷukkoṇru sholluvār attanaiyum māyam
māyanivan sheidadellām enda enda nānum
marandu pōhādaḍiyē enakkorukālum
 
C2
āḍum tōhai ivanukku azhahāna kireeṭam
adan keezhē chuṭṭi onru ninru ninru āḍum
pāḍum kuzhal kaiyilēri paṇ surattai pāḍum
pārttu ninra pazhavinaihaḷ pakkam pārādōḍum
 
C3
veeshi naḍai naḍandālō vēdam pinnē ōḍum
vēynkuzhalin gānattirkku vēṇashruti pōḍum
māshillāda kuzhalishaikku maddaḷamum pōḍum
mannavan azhahaikkaṇḍu varivariyāhappāḍum
 
C4
ninaindāl pahalellām iravāha mārum
nenjam vandāl kadir madiyam onrāha shērum
munaindāl malaikooḍa kuḍai enru āhum chinna
muttaḷavu veṇṇai aṇḍa muhaḍeṇdru āhum
 
C5
āra amara eṇṇa avakāsham ēdu
āhaiyināl nee ezhundu avan pinnē ōḍu
teeravillaiyānāl idaitteḷindu nee pāḍu - avan
tirumbavillaiyānāl endan pērai māttippōḍu
 
Meaning
 
It’s him. It’s him. Don’t let him go and if you do, you don’t know how long it will be (before you get hold of him again)

It’s him. It’s him. There is no doubt. How many hearts he has conquered! There is no count at all. There is none to equal him in this world. If you let him go, it won’t be easy to search for him.

If you were to ask anybody in the streets of Gokulam, each one will tell you a different story and all of them will be myths. All that this trickster has done are things that I can never forget.

A fluttering peacock feather becomes his diadem. Below that a head-ornament swings and sways. A flute in his hand produces mellifluous tunes. Hearing this music, past misdeeds vanish.

Vedas follow his majestic gait. They maintain the pitch for the music from his flute. They are the drums for the flaw-less music from his flute. They praise his beauty by singing odes.

If he puts his mind to it, day becomes night. The sun and the moon become one. If he takes the effort, a hill becomes an umbrella. A small dab of butter becomes the universe.

Where is the time to sit and ponder about all this? Get up and run behind him. If you cannot, sing about all this. If he does not return, you can change my name.
 
வஸந்தா
 
ஆதி
இவந்தான் இவந்தானே விடாதே விட்டால்
எத்தனைக் காலமோ தெரியாதே
 
அப
இவந்தான் இவனேதான் ஐயமில்லையே
எத்தனைதான் கொள்ளை கொண்டான் கணக்கில்லையே
புவனம் முழுதும் இவனுக்கு ஈடில்லையே இவனைப்
போகவிட்டுத் தேடுவது எளிதல்லவே
 
ச1
ஆயர்பாடி தெருவினில் யாரைக்கேட்டாலும்
ஆளுக்கொன்று சொல்லுவார் அத்தனையும் மாயம்
மாயனிவன் செய்ததெல்லாம் எந்த எந்த நானும்
மறந்து போகாதடியே எனக்கொரு காலும்
&nbsp
ச2
ஆடும் தோகை இவனுக்கு அழகான கிரீடம்
அதன் கீழே சுட்டி ஒன்று நின்று நின்று ஆடும்
பாடும் குழல் கையிலேறி பண் ஸுரத்தைப் பாடும்
பார்த்து நின்ற பழவினைகள் பக்கம் பாராதோடும்
&nbsp
ச3
வீசி நடை நடந்தாலோ வேதம் பின்னே ஓடும்
வேய்ங்குழலின் கானத்திற்கு வேணச்ருதி போடும்
மாசிலாத குழலிசைக்கு மத்தளமும் போடும்
மன்னவன் அழகைக் கண்டு வரிவரியாய்ப் பாடும்
&nbsp
ச4
நினைந்தால் பகலெல்லாம் இரவாக மாறும்
நெஞ்சம் வந்தால் கதிர்மதியும் ஒன்றாகச் சேரும்
முனைந்தால் மலை கூட குடையென்று ஆகும் சின்ன
முத்தளவு வெண்ணை அண்ட முகமென்று ஆகும்
&nbsp
ச5
ஆர அமர்ந்து எண்ண அவகாம் ஏது
ஆகையினால் நீ எழுந்து அவன் பின்னால் ஓடு
தீரவில்லையானால் இதைத் தெளிந்து நீ பாடு- அவன்
திரும்பவில்லையானால் எந்தன் பேரை மாத்திப் போடு
&nbsp