andinēram nadikkaraiyōram

Bhairavi
 
Ādi
P
andinēram nadikkaraiyōram - vandu
ārāvāram sheiyyādē chōram
azhahudan iḷamayil iṛahonṛāḍa nanṛāha ninṛāḍa
 
 
AP
andamāha kuzhal oodum bālā
aravu muḍi ēṛum rāja gōpālā
antarangamuḍan gōpi nān enṛāl
avasarattālikaṭṭum rādhai maṇavāḷā
 
C1
aṛam poruḷ enbavai āgamam ānavai
avai ivai enbadu nee ; nee ;
yārumoru tuṇai enbadariya oruvahai
āḷavaruvadum nee ; nee ;
shruti muḍi meedu karudi naṭamāḍum tooyavan nee
tōṇum kadir maṛaiyum
āhum muzhumadiyum pōdu munam angē pōhavēṇumē
 
 


C2
kuḍattil koṇarnda veṇṇai tinrācchu
koḷḷai koṇḍa manamō unadācchu
iḍam valamāi vandu idenna vambācchu
ennōḍini irukkaṭṭum ini kāṭṭadē moocchu
 
 

C3
pinnalai pinninru izhukkalāmō adai
pēcchilē kēṭṭāl maruppaḷikkalāmō
unnazhahu vizhi ennai ēn izhandadenṛu
okkārum ikkārum pārkka uddhāram sheiyyalāmō
 
 
 

C4
attai veeṭṭu vazhi kēṭṭāi attanaiyum shonnēn
āttankarai vazhi kēṭṭāi attanaiyum shonnēn
muttattukku vazhi kēṭṭāl nān enna sheivēn
mōham taru pēcchu ellām vēnḍām ini shonnēn
 

 


Meaning
Do not create a ruckus on the banks of the river at eventide; the feather of a young peacock is fluttering and dancing. Oh, Rajagopala! who plays the divine flute, who dances on the hood of a snake, who secretly marries Radha when I claim that I am your bride. You are the inner meaning of dharma and you are the āgama. You are everything. You are my permanent companion. You create and control music. Even as the sun sets and the full moon arises, we need to leave (this place) The butter I brought has been consumed. And my heart has been stolen away by you. You tease me appearing from either side but I hope you don’t play this trick with others. Can you pull my braids from behind and deny when I question the impropriety? How can you question me in the presence of our friends and elders as to why I am not in the focus of your beautiful eyes? I gave you directions to your aunt’s house. I gave you directions to the river. But how can I reply when you ask me for a kiss? I beseech you to desist from indulging in seductive talk.

 


பைரவி
 
ஆதி
அந்தி நேரம் நதிக்கரையோரம் வந்து ஆரவாரம் செய்யாதே சோரம்
அழகுடன் இளமயில் இறகொன்றாட நன்றாக நின்றாட
 
அப
அந்தமாக குழல் ஊதும் பாலா அரவுமுடி ஏறும் ராஜகோபாலா
அந்தரங்கமுடன் கோபி நான் என்றாலோ அவஸரத்தாலி கட்டும் ராதை மணவாளா
 
ச1
அறம் பொருள் என்பவை ஆகமம் ஆனவை
அவை இவை என்பது நீ ; நீ ;
யாருமொரு துணை என்பதறிய ஒருவகை
ஆளவருவதும் நீ ; நீ ;
ச்ருதி முடிமீது கருதி நடமாடும் தூயவன் நீ
தோணும் கதிர் மறையும் ஆகும் முழுமதியும் போது முனம் அங்கே போகவேணுமே
ச2
குடத்தில் கொணர்ந்த வெண்ணை தின்றாச்சு
கொள்ளை கொண்ட மனமோ உனதாச்சு
இடம் வலமாய் வந்து இதென்ன வம்பாச்சு
என்னோடினி இருக்கட்டும் இனி எங்கும் காட்டாதே மூச்சு
 
 
ச3
பின்னலை பின்னின்று இழுக்கலாமோ அதை
பேச்சிலே கேட்டால் மறுப்பளிக்கலாமோ
உன்னழகு விழி என்னை ஏன் இழந்ததென்று
ஒக்காரும் மிக்காரும் பார்க்க உத்தாரம் செய்யலாமோ
 
 
ச4
அத்தை வீட்டு வழி கேட்டாய் அத்தனையும் சொன்னேன்
ஆத்தங்கரை வழி கேட்டாய் அத்தனையும் சொன்னேன்
முத்தத்துக்கு வழி கேட்டால் நான் என்ன செய்வேன்
மோகம் தரும் பேச்சு எல்லாம் வேண்டாமினி சொன்னேன்