āḍi ashaindu

Shreeranjani
 
Ādi
P
āḍi ashaindu varuhinrān - kaṇṇan
āḍi ashaindu varuhinrān
 
AP
neeḍiya tāmarai vizhihaḷ mella
nittirai koḷḷavō enravai sholla
vāḍiya mēniyō ingangum taḷḷa
vāvenrazhaitta rādhai pōvenru shinam koḷḷa
 

C1
vāi mozhiyō kēṭṭāl uḷḷam koḷḷai koṇḍāchchu
vāḍaiyō maṇam chandanappoocchu
ēittaruḷum pollā vēshamum ācchu
engē taraḷam enṛāl pin pakkamum pōchu

  
C2
kannattilē vegu kunguma poṭṭuhaḷ - adu
kāduvarayil poochu tiṭṭukkaḷ
munnē pinnē neer viyarvai shoṭṭuhaḷ
mōhanappēchukkuḷḷē muḍiya urai kaṭṭuhaḷ
 

C3
ittanai azhahinukkum mēlē
ēṇi vaittu eṭṭinārpōlē
vaitta ōr shiṭrāḍai tōḷ mēlē
vēṇumenru ār tandadō - mēlum uravālē
 

 


Meaning
Kannan is approaching, swaying gently

The lotus-like eyes whispering and willing him to go to sleep, the tired body staggering out of weakness, Radha who welcomed him first, shoos him away in anger.....

The heart rejoices on hearing the voice (but) the whiff of sandal perfume lays bare the masquerade as does the necklace behind the back ....(reveals the story)

The cheek dotted with sindoor spots, patches of (make-up) colour smeared till the ears, drops of sweat here and there, (revealing) the love talk covering up the truth.

Above all this beauty, reaching high above, who and what caused the dress to be so dishevelled that it rides on the shoulder?

 


ஶ்ரீரஞ்சனி
 
ஆதி
ஆடி அசைந்து வருகின்றான் - கண்ணன்
ஆடி அசைந்து வருகின்றான்
 
அப
நீடிய தாமரை விழிகள் மெல்ல
நித்திரை கொள்ளவோ என்றவை சொல்ல
வாடிய மேனியோ இங்கங்கும் தள்ள
வாவென்று அழைத்த ராதை போவென்று சினம் கொள்ள
 
ச1
வாய் மொழியோ கேட்டால் உள்ளம் கொள்ளை கொண்டாச்சு
வாடையோ மணம் சந்தனப்பூச்சு
ஏய்த்தருளும் பொல்லா வேஷமும் ஆச்சு
எங்கே தரளம் என்றால் பின் பக்கமும் போச்சு
 
ச2
கன்னத்திலே வெகு குங்கும பொட்டுகள் - அது
காதுவரையில் பூச்சு திட்டுகள்
முன்னே பின்னே நீர் வியர்வை சொட்டுகள்
மோகனப் பேச்சுக்குள்ளே முடிய உரை கட்டுகள்
 
 
ச3
இத்தனை அழகினுக்கும் மேலே 
ஏணி வைத்து எட்டினார் போலே
வைத்த ஓர் சிற்றாடை தோள் மேலே
வேணுமென்று ஆர் தந்ததோ - மேலும் உறவாலே