adaṭṭi uruṭṭi vazhi koṇarndāḷ

Aṭhāṇā
 
Ādi
P
adaṭṭi uruṭṭi vazhi koṇarndāl enṛeṇṇi
ānandappaṭṭāḷ yashōdai - ānālum avaḷ oru pēdai
aṇḍa bahiraṇḍa mahaḍu muṭṭi - appālum aḷanda piṛānai - op
pānavar engumilānai - parāparanai - nirāmayanai - dāmōdaranai...



AP
edukkēdō sholli - mukhastuti pāḍum -
iḷa malar kuzhali - mānē
ivanaiyum aḍakka - nānoru piḷḷai
ēngittavamirundu - peṭrēnē
idam paḍuvadāhina mozhiyō - inam kamazhvadāhina uraiyō
padam peruvadāhina muṛaiyō - palikkumunam - kaḷikka varum mukhattivanai...






C1
enakkanrō teriyum! teriyumēḍi!
unakku teriyumōḍi ivan peru māyan ena
ēzhai shol ellām ambalam ērādu - enrenekku teriyum
onṛu pōla pala jōtiḍarānavar - peṇ piṛakkum enṛu shonnadum attanai
jōtiḍaraiyum poiyākki vaittum ivan - āṇāhappiṛandadum
enakkanṛō teriyum! teriyumēḍi! tānāha shiṛandadum
enṛu anda peṇ uruvāhina pootanai tanaiyoru vātanaiyāhiḍa
izhuttu uṛinji uyiruḍan nanjinai - azhittu azhittu ninṛananō anṛē...








C2
marattaḍiyil māḷavi - kuḷattaḍiyil goorjari - nadikkarayil āhiri
kiṇattaḍiyil dhēnuka - madukkaraiyil mōhanam
manakkediril ārabhi - naḍutteruvil sāvēri ena
sāḷiyōḍu - muraḷi gānam - uruhumāru peruha pāḍi
taruṇiyaradu - manamayanga - tāṇḍavamiḍum ivanai uḷḷapaḍiyārenṛu...




MK
ēzhai shol ellām ēṛādenṛō kaṇakku
ettanai nāḷaḍi irukkumō vazhakku
mōzhai moottadenṛa ānṛorgaḷ karuttu
muṭṛilum sariyācchē mukunda murahari tahundadoru kiṛukku



 


அடாணா
 
ஆதி
அதட்டி உருட்டி வழி கொணர்ந்தாள் என்றெண்ணி
ஆனந்தப்பட்டாள் யசோதை - ஆனாலும் அவள் ஒரு பேதை
அண்ட பகிரண்ட மகடு முட்டி - அப்பாலும் அளந்த பிரானை - ஒப்
பானவர் எங்குமிலானை - பராபரனை - நிறாமயனை - தாமோதரனை…



அப
எதுக்கேதோ சொல்லி - முகஸ்துதி பாடும் -
இள மலர்க்குழலி - மானே
இவனையும் அடக்க - நானொரு பிள்ளை
ஏங்கி தவமிருந்து - பெற்றேனே
இதம் படுவதாகின மொழியோ - இனம் கமழ்வதாகின உரையோ
பதம் பெருவதாகின முறையோ - பலிக்குமுனம் - களிக்க வரும் முகத்திவனை...






ச1
எனக்கன்றோ தெரியும்! தெரியுமேடி!
உனக்கு தெரியுமோடி இவன் பெரு மாயன் என
ஏழை சொல் எல்லாம் அம்பலம் ஏறாது - என்றெனக்கு தெரியும்
ஒன்று போல பல ஜோதிடரானவர் - பெண் பிறக்கும் என்று
சொன்னதும் அத்தனை ஜோதிடரையும் பொய்யாக்கி வைத்தும் இவன் - ஆணாக பிறந்ததும் எனக்கன்றோ தெரியும்! தெரியுமேடி! தானாக
சிறந்ததும் என்று அந்த பெண் உருவாகின பூதனை தனையொரு
வாதனையாகிட இழுத்து உறிஞ்சி உயிருடன் நஞ்சினை - அழித்து அழித்து நின்றனனோ அன்றே...








ச2
மரத்தடியில் மாளவி - குளத்தடியில் கூர்ஜரி - நதிக்கரையில் ஆஹிர கிணத்தடியில் தேனுகா - மதுக்கரையில் மோஹனம் மனக்கெதிரில் ஆரபி - நடுத்தெருவில் சாவேரி என ஸாளியோடு - முரளி கானம் - உருகுமாரு பெருக பாடி தருணியரது - மனமயங்க - தாண்டவமிடும் இவனை உள்ளபடியாரென்று...)




மகா
ஏழை சொல் எல்லாம் ஏறாதென்றோ கணக்கு
எத்தனை நாளடி இருக்குமோ வழக்கு
மோழை மூத்ததென்ற ஆன்றோர்கள் கருத்து
முற்றிலும் ஸரியாச்சே முகுந்த முரஹரி தகுந்ததொரு கிறுக்கு…