mun sheida tavappayanē

mun sheida tavappayanē

Bhoopālam
 
Ādi
P
mun sheida tavappayanē – engaḷ
mukti tarum mādhavanai bhakti sheiya kiḍaitadu
 
(mun sheida)
AP
munnoru kālaḍiyil moovulahaḷandōn ippō
moovulahum vāzha gāna mazhai pozhindōn
 
(mun sheida)
 
punnahai shidarāmē puḷḷinvāi piḷandōn – chinna
pullānkuzhalai koṇḍu ellā ulahāna
vallānivanaippāḍa vāyāra – tēnoora
 
 
(mun sheida)
C
ninaindālum oru sukhamē – ninaindu
ninaindu ninaindu manam kashindu kaṇṇeeruguha
ninaindālum oru sukhamē
 
 
1
gnyānamenam āyar vāzhmanaiyil vandu tānumuravāhum
tanmaiyadu sholli
(ninaindālum)
2
āḍuvar āḍādavar puhazh sholli pāḍuvar pāḍādavar maraivazhipuha
tēḍuvar tēḍādavar yāvaruḷamum arindu aruḷ mazhai pozhindu ninṛadai
 
(ninaindālum)
3
ahamura veḷḷānai ēri madangkuraiya aḍiyavar koḍu pootanaiyazhiyavum
tarumenavanda māmazhai taḍukka malaishumandu aruḷ mazhai
pozhindu ninṛadai
 
(ninaindālum)
4
shangoḍu sārngamum āzhiyum kuḍai kamaṇḍalamum kōḍari
kōdaṇḍamum ingivai āhādena vanamalar mālaiyum pontuhilum
māmayilirahum tangiya marakata mēniyum āvari komboḍu kuzhalum
kunjita padamum engengu nōkkinum pongu kurunahaiyum mangaḷa
mukhamoḍu mānmada tilakamum
 
 
 

(ninaindālum)
5
araikkashainda gnyānoḍu pulinaham ashaindāḍa kinkiṇi shadangaioli
karavaihaḷ aṇipaṇi nādamoḍu kādal māṭavartaru karavanaiyolihaḷum
kanṛu kuḷam poliyum malarin madu vaṇḍu nuharndiḍu vaṇḍoliyum – kalam
koṇḍu ishaiyum shiruvarhaḷ palaruḍan vanam ninṛu
kuzhaloodum paṇṇishaiyum indru
 
 
 
 
(ninaindālum)
6
maraimudaliḍai antamāhiya poruḷum maṇviṇoḍu paranda toruveḷiyum
aramum aram tamakkōr uruvamum arivum āvanavum nanē ena
piraivazhi vandār koḍu samariḍaiyinil perum pavana mahanār koḍi
nizhalum tirandaruḷum vāyiduvē manaitorum tēḍi
veṇṇaiyuṇḍa vāyiduvē ena
 
 
 

(ninaindālum)
 
enaiyāḷum eerēzhu ulahāḷum aḍiyavar manamāḷum yadukulam
tanaiyāḷum kaṇṇanai munaindōḍum yamunai turaivanai evvuyirkkum
iraivanai en mana niraivōnai pāḍappāḍa
 

(mun sheida)


பூபாளம்
 
ஆதி
முன் செய்த தவப்பயனே - எங்கள்
முக்தி தரும் மாதவனை பக்தி செய்ய கிடைத்தது

(முன் செய்த)
அப
முன்னொரு காலடியில் மூவுலகளந்தோன் இப்போ
மூவுலகும் வாழ கான மழை பொழிந்தோன்
புன்னகை சிதறாமே புள்ளின்வாய் பிளந்தோன் - சின்ன
புல்லாங்குழலைக் கொண்டு எல்லா உலகாள
வல்லானிவனைப்பாட வாயார - தேனூற

 
 
 
 
(முன் செய்த)
நினைந்தாலும் ஒரு சுகமே - நினைந்து
நினைந்து நினைந்து மனம் கசிந்து கண்ணீருகுக
நனைந்தாலும் ஒரு சுகமே
 
1
ஞானமெனம் ஆயர் வாழ்மனையில் வந்து
தானுமுறவாகும் தன்மையது சொல்லி

(நினைந்தாலும்)
2
ஆடுவர் ஆடாதவர் புகழ்ச் சொல்லி பாடுவர் பாடாதவர் மறைவழிபுக
தேடுவர் தேடாதவர் யாவருளமும் அறிந்து அருள் மழைப் பொழிந்து நின்றதை

(நினைந்தாலும்)
3
அகமுற வெள்ளானை ஏறி மதங்குறைய அடியவர் கொடு பூசனையழியவும்
தருமெனவந்த மாமழைத் தடுக்க மலைசுமந்து அருள் மழைப் பொழிந்து நின்றதை

(நினைந்தாலும்)
4
சங்கொடு சார்ங்கமும் ஆழியும் குடை கமண்லடமும் கோடரி கோதண்டமும்
இங்கிவை ஆகாதென வனமலர் மாலையும் பொன்துகிலும் மாமயிலிறகும்
தங்கிய மரகத மேனியும் ஆவரிக் கொம்பொடு குழலும் குஞ்சிதப் பதமும்
எங்கெங்கு நோக்கினும் பொங்கு குறுநகையும் மங்கள முகமொடு மான்மத திலகமும்

 
 
 
(நினைந்தாலும்)
5
அரைக்கசைந்த ஞாணொடு புலிநகம் அசைந்தாட கிங்கிணி சதங்கையொலி
கறவைகள் அணிபணி நாதமொடு காதல் மடவார்தரு கரவனையொலிகளும்
கன்று குளம் பொலியும் மலரிந் மது வந்து நுகர்ந்திடு வண்டொலியும் - கலம்
கொண்டு இசையும் சிறுவர்கள் பலருடன் வனம் நின்று குழலூதும் பண்ணிசையும் இங்கு

 
 
 
(நினைந்தாலும்)
6
மறைமுதலிடை அந்தமாகிய பொருளும் மண்விண்ணொடு பரந்த தொருவெளியும்
அறமும் அறம் தமக்கோர் உருவமும் அறிவும் ஆவனவும் நானே என
பிறைவழி வந்தார்க்கொடு சமரிடையினில் பெரும் பவன மகனார்க்கொடி நிழலும்
திறந்தருளும் வாயிதுவே மனைதொறும் தேடி வெண்ணையுண்ட வாயிதுவே என

 
 
(நினைந்தாலும்)
 
எனையாளும் ஈரேழு உலகாளும் அடியவர்
மனமாளும் யதுகுலம் தனையாளும் கண்ணனை
முனைந்தோடும் யமுனைத் துறைவனை எவ்வுயிர்க்கும்
இறைவனை என் மன நிறைவோனைப் பாடப்பாட