manjana māḍa

manjana māḍa

Reetigowḷa
 
Ādi
P
manjana māḍa nee vārāi – kaṇṇā
malarmukhamadu mādhava yādavakula tāmarai nāyaka
 
AP
konjum kiḷi annamē – engaḷ
gōkulam vāzha vanda deivamē – unnai
konja vēṇumō – innamē āyar
kulam vāzha vandu ninṛa nalam tērum shelvamē
 
MK
kiṇṇamum eṇṇaiyum pungam pulāvum vembunalum vara taṇṇenṛāhudu
pon perum āḍaiyaḷāvi eḍuttadu pōdumunakkoru puṇṇiyamāhudu
 
C
kadaikkengē pōvēnō svāmi – engum
kāṇāda rāja gōpāla svāmi – kadai
edaiyum shonnāl enakaduvum teriyum enṛāi
inimēlē enkadai onṛudān svāmi
 
MK
intaḷam shiṛanda paṇṇōḍum kalanda ezhilāna kuzhaloodi
iduvarai āriyādoru mādhavamāmunihaḷum māmalaraḍipaṇimādhava
nidhiyarindu neediyarindu ninniḷamukha sannidhi arinda mā
sundara mukhamoḍu mandanahai miḷira vandaruḷuha ini andamurum naḍaiyoḍu
 
 
 


ரீதிகௌள
 
ஆதி
மஞ்சன மாட நீ வாராய் - கண்ணா
மலர்முகமது மாதவ யாதவகுல தாமரை நாயக
 
 
 
அப
கொஞ்சும் கிளி அன்னமே - எங்கள்
கோகுலம் வாழ வந்த தெய்வமே - உன்னைக்
கொஞ்ச வேணுமோ - இன்னமே - ஆயர்க்
குலம் வாழ வந்து நின்ற நலம் தேறும் செல்வமே
 
மகா
கிண்ணமும் எண்ணையும் புங்கம் புலாவும் வெம்புனலும் வர தண்ணென்றாகுது
பொன் பெறும் ஆடையளாவி எடுத்தது போது முனக்கொரு புண்ணியமாகுது
 
கதைக்கெங்கே போவேனோ ஸ்வாமி - எங்கும்
காணாத ராஜ கோபால ஸ்வாமி - கதை
எதையும் சொன்னால் எனக்கதுவும் தெரியும் என்றாய்
இனிமேலே என்கதை ஒன்று தான் ஸ்வாமி -
 
மகா
இந்தளம் சிறந்த பண்ணொடும் கலந்த எழிலான குழலூதி இதுவரையறியா தொரு மாதவமாமுனிகளும் மாமலரடிபணிமாதவ நிதியறிந்து நீதியறிந்து நின்னிளமுக சன்னிதி யறிந்த மா சுந்தர முகமொடு மந்தநகை மிளிர வந்தருளுக இனி அந்தமுறும் நடையொடு